இது நடந்து அஞ்சாறு வருஷமாச்சு.மனைவியும் நானும் தேனிலவுக்காக ஊட்டி போயிருந்தோம்.சுற்றிப் பார்க்க ஒரு வண்டியை ஏற்பாடு செய்திருந்தனர் விடுதி நிர்வாகத்தினர்.அதில் புதுமண தம்பதியராக ஒரு பத்து சோடி மக்களை ஏற்றிக்கொண்டு வண்டி கிளம்பியது.பக்கத்தில்
ஒரு சோடி நல்ல கலராக , பார்க்க வடநாட்டு மக்களாக தெரிந்தார்கள்.ஆங்கிலத்திலேயே
பேசி நம்மைக் கொன்று எடுத்துக் கொண்டிருந்தார்கள்.
அருங்காட்சியகம் ஒன்றைப் பார்ப்பதற்காக வண்டி நின்றது .அனைவரும் உள்ளே சென்று பார்த்துக்கொண்டிருந்தோம்.கைகளை பாண்ட் பாக்கெட்டினுள் வைத்துப் பார்த்துக்கொண்டிருந்த என்னுடைய முழங்கையின் மேல் திடீரென ஒரு ரோஜாப்பூவை வைத்து அடித்தது போல் ஒரு சின்ன இடி.திரும்பிப் பார்த்தால் வண்டியில் அருகில் அமர்ந்துவந்த அழகுப்பெண்.நான் பார்க்கவும் அவர் அப்ப்ப்பா என்று வலியிலும்,வெட்கத்திலும் மெல்லிய குரலில் கத்தும் ஓசை காதில் விழவும் சரியாக இருந்தது.அவருடைய மார்பு தான் இடித்து விட்டது.என் வாழ்வில் அப்படியொரு இனிமையான,கிளுகிளுப்பான குரலை நான் கேட்டதில்லை.
ஆயிரம் சிலுக்குகள் ஒன்றாய்ச் சேர்ந்து காதில் கிசுகிசுப்பது போன்று இருந்தது அது.
சில நிமிடங்களில் எனக்கு சுய உணர்வு திரும்பியது.ஆஹா நம்ம ஊரு பொண்ணு தானா இது என்று நினைத்துக் கொண்டேன்.ஆபத்துக் காலங்களில் நம்மையும் அறியாமல் பேசுவது நம் தாய்மொழி தான்.
இந்தசம்பவம் என் நினைவடுக்குகளின் ஆழத்தில் இருந்தது.சமீபத்தில் தமிழ்நதியின் ஒரு பின்னூட்டம் பார்த்தேன்.தூங்கும் போது ஒருவனுடைய பின்புறத்தில் அடித்தால் எந்த மொழியில் கத்துவான் என்று கேட்டிருந்தார்.ஆங்கிலத்திலேயே கதைத்துக் கொண்டிருப்பவர்களை நன்றாகக் கேலி செய்திருந்தது அப்பின்னூட்டம்.அதைப் படித்தவுடன் மனதின் ஆழத்திலிருந்து விடுபட்டு மிதந்து மேலே வந்து விட்டது.
(தலைப்பு உபயம்-ஜெயமோகன்.அவருக்கு நன்றி.)
Saturday, January 26, 2008
Subscribe to:
Post Comments (Atom)

7 comments:
ஆமா இது உங்க வீட்டம்மாவுக்கு தெரியுமுங்களா
//ஆமா இது உங்க வீட்டம்மாவுக்கு தெரியுமுங்களா//
வீடே ரெண்டாயிடும்.அதனால தானே மாறுவேசத்துல சுத்திக்கிட்டு இருக்கோம்.
//தூங்கும் போது ஒருவனுடைய பின்புறத்தில் அடித்தால் எந்த மொழியில் கத்துவான் என்று கேட்டிருந்தார்.//
உரக்கச் சொல்லுவேன் 'fcuk you' என்று!!
naalla iruku onga natamai
வெண்ணையெனத்தன்னை
விளித்துக்கொள்ளுமண்ணை
வணங்குகிறேனுன்னை.
என் பொண்டாட்டி தமிழ், நான் மராட்டி.
இருந்தாலும் என் குழந்தைகள் அழுதாலோ, என் பொண்டாட்டி அத்தான்'னு இரவிலே கூப்பிட்டாலோ நான் சொல்றது.. "என்னடா ஆச்சு!" தமிழில்... இது கல்யாணத்துக்கு அப்புறம்...
கல்யாணத்துக்கு முன்னால்... என் அம்மாவோ, அப்பாவோ, அக்காவோ, ரூம்-மெட்சோ எழுப்பினால் நான் கேட்பது "க்யா!"..
காலம் மாறும்...
வாழ்த்துக்கள்
ரமேஷ்
வருகைக்கு நன்றி ரமேஷ்.
காதலுக்கும்,அன்புக்கும் உயிரையே கொடுக்கலாம்,மொழி எம்மாத்திரம்.
Post a Comment