Friday, January 11, 2008

கலாமின் புத்தாண்டுச் செய்தி

புத்தாண்டு முடிந்து இத்தனை நாள் கழித்து இந்தப்பதிவா என்று நினைத்தாலும் சரித்திர நாயகனின் சிந்தனைகளை மறந்து விடக்கூடாது என்பது முக்கியம்.சன் தொலைக்காட்சியில் கலாம் பேட்டி வழங்கியதில் இருந்து சில வரிகள்.தனக்குப் பிடித்ததாக இரண்டு குறள்களை குறிப்பிட்டார்.
ஒன்று,
'வெள்ளத்தனையது மலர் நீட்டம் மாந்தர்தம்
உள்ளத்தனையது உயர்வு'
மற்றொன்று
'உள்ளுவது எல்லாம் உயர்வு உள்ளல் மற்றது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து'

இரண்டுமே மனம் சம்பந்தப் பட்டது.உயர்ந்த எண்ணங்களை மனதில் விதைத்தால் உயர்ந்த பலன்களைஅறுவடை செய்யலாம்.விதைத்து விட்டால்
தானாகவே பலன் கிடைத்து விடுமா?அதற்கும் வழி சொல்கிறார் கலாம்.

எண்ணங்களில் உறுதி,கடும் உழைப்பு,செயலில் தீவிரம் இம்மூன்றும் இருந்து விட்டால் எத்தகைய சாதனையையும் செய்யலாம்.என்னைப் போன்ற வசதி,வாய்ப்புகளற்ற ஆனால் கனவு மட்டுமே காணத் தெரிந்தவர்களுக்கு கலாம் ஒரு ஆற்றல்மூலமாகத் திகழ்கிறார்.
என்னுடைய கனவை சுருக்கமாகச் சொன்னால் மாபெரும் கல்வி நிறுவனம் ஒன்றை நடத்த வேண்டும்,அதில் பயில்பவர்களுக்கு ஆடம்ஸ்மித்,மார்க்ஸ்,நியூட்டன்,டார்வின்,ஐன்ஸ்டீன் போன்ற உலகை மாற்றிய சிந்தனையாளர்களை பயிற்றுவிக்க வேண்டும்.காலம் கருணை காட்டினால் ,அதாவது என்னை உயிரோடு விட்டு வைத்தால் இதையெல்லாம் செய்தே தீர வேண்டும்.

2 comments:

')) said...

//மாபெரும் கல்வி நிறுவனம் ஒன்றை நடத்த வேண்டும்,அதில் பயில்பவர்களுக்கு ஆடம்ஸ்மித்,மார்க்ஸ்,நியூட்டன்,டார்வின்,ஐன்ஸ்டீன் போன்ற உலகை மாற்றிய சிந்தனையாளர்களை பயிற்றுவிக்க வேண்டும்.//

வாழ்த்துக்கள்

')) said...

வருகைக்கும்,வாழ்த்துக்கும் மிக்க நன்றி கையேடு.