நிமிடத்துக்கு ஐம்பது வண்டி செல்லும் அந்த நெடுஞ்சாலையில் தினமும் ஒரு நாய் அடிபட்டு சாவது வாடிக்கை.வயிறு கிழிந்து கோரமாக செத்துக்கிடக்கும் நாயை அப்புறப்படுத்த யாருமே முன்வரமாட்டார்கள்,நானும் தான்.இதைச் செய்ய வேண்டிய நகர சுத்திகரிப்பு ஊழியர்களோ ஒரு நாள் கூட இதைச் செய்து பார்த்தில்லை.பல்லாயிரக்கணக்கான வாகனங்களால் ஏற்றப்பட்டு சில நாட்களில் அந்த நாய் இறந்த சுவடே தெரியாமல் போய்விடும்,தோல் கூட மிஞ்சாது.
வழக்கம் போல இப்படி ஒரு நாய் அடிபட்டு கிடந்த போது,தூரத்திலேயே அதைப் பார்த்து உச்சு கொட்டிக்கொண்டே வந்து கொண்டிருந்தேன்.அப்போது ஒரு இளைஞன் நாயின் காலைப் பிடித்து சாலையின் ஓரத்துக்கு இழுத்துக் கொண்டிருந்தான்.அழுக்கு வேட்டி,சட்டை,பரட்டைத்தலை
சகிதமாக இருந்த அவனைப் பார்க்க ஆச்சரியமாக இருந்தது.ஓரமாக நின்று வேடிக்கை பார்க்க தொடங்கினேன்.
அவன் ஒரு நாடோடி.ஒரு துணி மூட்டையும்,சுமந்து செல்ல ஒரு குச்சியும் பக்கத்தில் இருந்தது.சிறு இரும்புக்கம்பி ஒன்றை வைத்து சின்ன குழி ஒன்றை வெட்ட ஆரம்பித்தான்.பின் அந்த நாயை குழியில் இறக்கி மண்னைப்போட்டு மூடினான்.இவ்வளவையும் பார்த்துக்கொண்டிருந்த நான் வெட்கிப்போய் விட்டேன்.
மாபெரும் ஆன்மீகத் தத்துவங்களை அறிந்திராத நாடோடியின் மனிதநேயம் மெய்சிலிர்க்க வைத்தது.
Thursday, January 10, 2008
Subscribe to:
Post Comments (Atom)

2 comments:
மாபெரும் ஆன்மீகத் தத்துவங்களை அறிந்திராத நாடோடியின் மனிதநேயம் மெய்சிலிர்க்க வைத்தது.//
அந்த நேயம் ரொம்ம்ம்ப படிக்காததலே வந்ததுன்னு நினைக்கிறேன்...
மாபெரும் ஆன்மீகத் தத்துவங்களை படித்து விட்டால் தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்புவுதான் இவ்வுலகின் வாடிக்கை.
//மாபெரும் ஆன்மீகத் தத்துவங்களை படித்து விட்டால் தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்புவுதான் இவ்வுலகின் வாடிக்கை.//
ஆமாம் தெகா.மிகச் சாதாரண மனிதனின் அந்தச்செயல் இறைவனுக்கு அருகில் கொண்டு போய் அவனை நிறுத்தி விட்டது.
Post a Comment