Sunday, August 3, 2008

ரஜினியின் குரங்குத்தவம்

ஒகனேக்கல் பிரச்சினையில் கன்னடர்களை உதைக்க வேண்டும் என ரஜினி உணர்ச்சி வசப்பட்ட போது, தான் விரும்பியோ,விரும்பாமலோ,அறிந்தோ,அறியாமலோ தமிழக அரசியலில் வலுவாக தன் இருப்பை,முக்கியத்துவத்தை வெளிப்படுத்தினார் என்றே நினைத்தேன். கலைஞருக்குப் பின்னான அரசியலில் வேறு எவரையும் விட ரஜினிக்கு உள்ள வாய்ப்பு பிரகாசமானது. எதார்த்த நிலை இவ்வாறு இருக்க குசேலன் படத்துக்காக கன்னடர்களிடம் வருத்தம் தெரிவித்துள்ளது அவரது இமேஜை குலைப்பதாகவே உள்ளது. வருத்தம் தெரிவித்தது அவரது பெருந்தன்மையைக் காட்டுவதாக உள்ளது என்று ஒரு சாரார் எண்ணினாலும், மறுபுறம் அவரது குழம்பிய மனதை,அரசியல் தெளிவின்மையைக் காட்டுவதாகவே உள்ளது.

ரஜினியின் பலம் ஆன்மீகம் என்று கே.பாலச்சந்தர் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டார்.ஆன்மீகச்சிந்தனைகளாலும்,தவ வலிமையாலும் நிறைந்து உள்ள ரஜினியின் இச்செயல்கள் ஆன்மீகம்,தியானம் போன்றவற்றை ஐயுற வைக்கின்றன. இச்செயல்கள் அவர் ஒரு நல்லநடிகர் என்பதை நிருபிப்பதுடன்,மேலும் அவர் ஒரு நல்ல தலைவராக முடியாது என்றும் நிரூபிக்கின்றன. ரஜினி் ஒரு அரசியல் ஆளுமை என்பதால் தான் கன்னடர்களின் வெறுப்பை சம்பாதித்து உள்ளார்.ஒரு நடிகராக பேசியிருந்தால் கன்னடர்கள் பொருட்படுத்தியிருக்க மாட்டார்கள். எனவே தான் ஒரு நடிகரா, அல்லது அரசியல் ஆசை தனக்குள் இருக்கிறதா என்பதை விரைந்து கண்டுபிடிக்க வேண்டும். அதுவரை சுண்டெலிகளும் அவரைக் கடித்து வைத்துவிட்டு கொக்கரிப்பது தொடரத்தான் செய்யும்.

6 comments:

Anonymous said...

சூர்யாஆஆஆஆஆ?

ராம்!

')) said...

இந்தமுறை கடித்தது சுண்டெலிகள் மட்டுமல்ல...பெருச்சாளிகளும் குதறியே விட்டன.காயம் ஆறுவதற்கு கொஞ்சம் நாட்களாகும் என விமர்சக மருத்துவர்கள் அறிவிப்பு.

')) said...

//பெருச்சாளிகளும் குதறியே விட்டன.//

ராஜநடராஜன்,அவர் சிங்கங்களுடன் மோதவேண்டிய ஆள்.ஆனால் தானும் குழம்பி ரசிகர்களையும் குழப்பத்திலேயே வைத்திருப்பது தான் பெருச்சாளி வகையறாக்களும் அவரை உரசிப் பார்க்கின்றன.

')) said...

//சூர்யாஆஆஆஆஆ?

ராம்!//

ராம் , புரியலையே?

Anonymous said...

வாங்க... ஜோதில ஐக்கியம் ஆயாச்சு போல...

')) said...

நன்றி மோகன். ஆளாளுக்கு ரஜினிய காச்சுறாங்க.நம்ம பங்குக்கு இது.