வலையுலக்குக்கே உரிய சொல்லாட்சி " பிரியாணிக்குஞ்சு" என்பது. இதை உருவாக்கிய மகராசன் யார் என தெரியவில்லை. தான் சார்ந்திருக்கும் கட்சிக்கு கண்மூடித்தனமான ஆதரவு கொடுப்பவர்கள் இந்த பி.குஞ்சுகள் . அரை பிளேட் பிரியாணிக்கும்,குவார்ட்டருக்கும் உயிரையும் கொடுக்கத்துணிபவர்கள் என்றால் மிகையாகாது.இவர்களுக்கு சற்றும் சளைக்காத இன்னொரு வகையினர் தான் விசிலடிச்சான் குஞ்சுகள். தங்கள் மனங்கவர்ந்த நடிகருக்காக மொட்டை போடுவது,காவடி தூக்குவது, அங்கப்பிரதட்சணம் செய்வது, கட்டவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்வது, பேப்பரைக்கிழித்து சூறை விடுவது , மிக முக்கியமாக விசிலடிப்பது இவையே வி.குஞ்சுகளின் முக்கிய பணிகள். சமீபத்திய தசாவதார விமர்சன களேபரத்தில் வீறு கொண்டெழுந்த விசில் குஞ்சுகளின் ஆவேசம் ஆச்சரியமூட்டுவதாகவுள்ளது. பிரி.குஞ்சுகளின் ஆவேசத்தையாவது புரிந்து கொள்ளமுடியும். இனஉணர்வு,மொழியுணர்வு,கொளகை ரீதியான விசயங்கள் இவற்றுக்காக விடாப்பிடியாக அடித்துக்கொள்வார்கள்.இவர்கள் போராடுவதிலும் அர்த்தம் இருக்கிறது.தங்கள் தரப்பு வாதங்களை எடுத்து சொல்லாமல் இருந்தால் தங்கள் உரிமைகள் பறிபோகும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் தசாவதாரம் படம் அறுவை என்று சிலர் சொன்ன சப்பை மேட்டருக்காக விசில் குஞ்சுகள் வந்த வரத்து அச்சமூட்டுவதாக உள்ளது. இளைய சமுதாயம் எங்கே சென்று கொண்டிருக்கிறது. விசில் குஞ்சுகளில் பெரும்பாலானோர் அரசியல்,சமூக விசயங்களில் எந்த கருத்தையும் உதிர்த்தது போல் தெரியவில்லை. கமல் படங்கள் ஓரளவிற்கு அறிவுபூர்வமாகவும்,அழகுணர்ச்சியோடும் இருந்தாலும் அவரது ரசிகர்கள் அவ்வாறில்லாமல் கண்மூடித்தனமாக ஆதரிப்பதால் என்ன பலன்?. பிரி.குஞ்சுகளுக்காவது கொள்கை,லட்சியம் என்று இருக்கிறபடியால் தங்கள் தலைவர்களின் முரண்பாடுகளை சகித்துக்கொண்டு இருந்து விடுகின்றனர், விசில் குஞ்சுகளுக்கு அப்படி என்ன நிர்ப்பந்தம் இருக்கிறது?.
இந்த இருவகை குஞ்சுகளிலும் சேராத தனித்தன்மை வாய்ந்த சிலர் இருக்கிறார்கள்.சுத்த சுயம்புவாக சிந்திக்கக்கூடியவர்கள், உலகமகா கருத்துக்களை சொல்பவர்கள், ஓட்டுப்போடக்கூட வரமாட்டார்கள். நடுநிலைக்குஞ்சுகள் என்று இவர்களை சொல்லலாம். கமலுக்கே இவ்வளவு வெறிபிடித்த விசில்குஞ்சுகள் இருக்கும்போது, ரஜினியைபற்றி சொல்லவே வேண்டாம். இவர்கள் இருவரும் அரசியலுக்கு வந்தால் அரசியல் பெருந்தலைகள் பலவும் பின்னங்கால் பிடறியில் பட ஓடி ஒளிவது மட்டும் உறுதி.
Wednesday, August 6, 2008
Subscribe to:
Post Comments (Atom)

8 comments:
என் மன அகராதியில் இன்னுமொரு புது வார்த்தை "பிரியாணிக்குஞ்சுகள்". வார்த்தைக்குச் சொந்தக்காரர் நிச்சயம் சென்னைவாசிதான்.ஏனென்றால் அங்கிருந்துதான் டவுசர் கிழிந்தது போன்ற நவீன இலக்கியங்கள் தோன்றுகிறது:)
அருமையான கருத்துக்கள்.
//இவர்கள் இருவரும் அரசியலுக்கு வந்தால் அரசியல் பெருந்தலைகள் பலவும் பின்னங்கால் பிடறியில் பட ஓடி ஒளிவது மட்டும் உறுதி. // - இதை மட்டும் என்னால் ஒப்புக்கொள்ள முடியவில்லை.
சில க்ராஸ்பெல்ட் குஞ்சுகள் யார் என்ன செய்தாலும் தேவையில்லாமல் அதில் மூக்கை நுழைத்து அடி வாங்கி ஆனந்தம் அடைவார்கள். அவர்களைப் பற்றியும் எழுதுங்கள்.
====
இளைய சமுதாயம் எங்கே சென்று கொண்டிருக்கிறது. விசில் குஞ்சுகளில் பெரும்பாலானோர் அரசியல்,சமூக விசயங்களில் எந்த கருத்தையும் உதிர்த்தது போல் தெரியவில்லை
====
உன்மை...
சரியாக எழுதி உள்ளீர்கள்.
//நிச்சயம் சென்னைவாசிதான்.//
இருக்கலாம் ராஜநடராஜன்.டவுசர் பார்ட்டிக்கு எதிர்பார்ட்டி என்பதும் நிச்சயம்.
//இதை மட்டும் என்னால் ஒப்புக்கொள்ள முடியவில்லை.//
ராபின்,நடக்கும் நிகழ்வுகள் (உதாரணம்-விஜயகாந்துக்கு மக்களின் ஆதரவு)அப்படி எண்ணத்தூண்டுகிறது.
//சில க்ராஸ்பெல்ட் குஞ்சுகள் யார் என்ன செய்தாலும் தேவையில்லாமல் அதில் மூக்கை நுழைத்து அடி வாங்கி ஆனந்தம் அடைவார்கள். அவர்களைப் பற்றியும் எழுதுங்கள்.//
அன்புள்ள அனானி,தேவையின்றி க்ராஸ்பெல்ட்டை சீண்டுவதற்கு அன்பான கண்டனங்கள்.
//உன்மை...
சரியாக எழுதி உள்ளீர்கள்.//
நன்றி குரங்குக்குட்டி,ஏதோ மனசுல தோனுறத எழுதி வைக்கிறேன்.
Post a Comment