ஜெமோவின் இணையப்பக்கங்களை மேய்ந்ததில் அவர் அனைத்து விஷயங்களையுமே கேலி செய்கிறார்.வரைமுறை இல்லாமல் கேலி செய்பவர்கள் அடிப்படையில் தன்மதிப்பு இல்லாதவர்களாகவே இருக்கிறார்கள்.அவர் கேலியிலிருந்து தப்பிய விஷயம் எதுவென்று பார்த்தால் இந்து மதம் மட்டுமே மிஞ்சுகிறது.
பெரியாரின் இயக்கம் மலட்டு இயக்கம் என்று சொல்வதைப் பார்த்தால் இவர் ஒரு மூனாபூனாவாக இருப்பாரோ என்று எண்ணத் தோன்றுகிறது என்று அவரை வாசித்துப் பார்த்த நண்பர் ஒருவர் கூறுகிறார்.அறிவியல் புனைகதை எழுதுகிறேன் பேர்வழி என்று சித்தர்களின் கோவணத்தை பிடித்து தொங்கிக் கொண்டிருப்பதை பார்த்தால் இந்த ஆள் பழைய பெருங்காய டப்பா என்று இன்னொரு நண்பன் அலுத்துக் கொள்கிறான்.இவர் பேண்டது,மோண்டது,வந்தது,போனது எல்லாவற்றையும் பதிவு செய்கிறார்,ஏனென்றால் அதுதான் இலக்கியம்.கட்சியிலே இருந்து கொண்டே காலை வாருகிறானே என்ன ஜென்மம்யா இவன் என்று தோழர் ஒருவர் குறைபட்டுக் கொண்டார்.அழியும் நிலையில் இந்து மதம் இருப்பதாகவும்,அதைக் காப்பாற்ற வந்த தெய்வப்பிறவியாகவும் இவருடைய எழுத்துக்கள் இருப்பதாக இந்து தேசிய பற்றாளர் ஒருவர் கூறுகிறார்.தனிப்பட்ட முறையில் அவரை கவனிக்கும் போது இந்தியாவின் பெருமையை இந்துமத எழுச்சியின் மூலம் மீட்டெடுக்க வந்த மாவீரனாகவே காட்சியளிக்கிறார்.எவ்வளவு எதிர்மறை விமர்சனங்கள் இருந்தாலும் நவீன இலக்கியத்தில் அவருடைய பங்கு குறிப்பிடத்தக்கது என்பதை உணரமுடிகிறது.அவர் ஒரு டவுசர்பாண்டி* என்ற அளவிலே அவரை வாசிப்பது தவிர்க்க முடியாதது.
(டவுசர் பாண்டி-வழி கேட்டு வருபவனை சுத்தி விடுவது)
ஜெமோ பற்றிய இன்னொரு இடுகை.
http://kadalaiyur.blogspot.com/2008/02/blog-post_15.html
Saturday, February 16, 2008
Subscribe to:
Post Comments (Atom)

6 comments:
//வரைமுறை இல்லாமல் கேலி செய்பவர்கள் அடிப்படையில் தன்மதிப்பு இல்லாதவர்களாகவே இருக்கிறார்கள்//
முற்றிலும் உண்மை
//அழியும் நிலையில் இந்து மதம் இருப்பதாகவும்,அதைக் காப்பாற்ற வந்த தெய்வப்பிறவியாகவும் இவருடைய எழுத்துக்கள் இருப்பதாக இந்து தேசிய பற்றாளர் ஒருவர் கூறுகிறார்//
இது தான் மிகச் சிறந்த அங்கத உணர்ச்சி.
இணைப்பிற்கு நன்றி...அகஆராய்ச்சியாளன்
//(டவுசர் பாண்டி-வழி கேட்டு வருபவனை சுத்தி விடுவது)//
சூப்பரப்பு :) ஜெயமோகனுக்கு சரியான பேருதான்!!
"நான் எல்லாவற்றையும் பகடி செய்வேன்" என்று பீற்றிக்கொள்ளூம் ஜெயமோகன், இந்துமதத்தையும், இந்துத்துவ இயக்கங்களையும் மட்டும் பகடி செய்யாமல் இருப்பது ஏன் என்ற நியாயமான கேள்வியை எழுப்பியிருக்கிறீர்கள், இது போன்ற இலக்கிய பகடிகளை நுண்ணர்வோடும் நகைச்சுவையோடும் அணுக வேண்டும் என்று அறிவுரை சொல்லும் ஜெயமோகனின் ஆசானான சாமியார் நித்ய சைதன்ய யதியை நாம் பகடி செய்தால் எப்படி அணுகுவார்.
சம்பூகன்
வருகைக்கும்,பாராட்டுக்கும் நன்றி செல்வம்.
//இந்துமதத்தையும், இந்துத்துவ இயக்கங்களையும் மட்டும் பகடி செய்யாமல் இருப்பது ஏன் என்ற நியாயமான கேள்வியை எழுப்பியிருக்கிறீர்கள்//
சம்பூகன்,
இந்து மதத்தை கேலி செய்யாமலிருக்கும் அதே நேரத்தில் கிறிஸ்து,முஸ்லிம் மக்களிடையே வெறுப்பை தூண்டும் விதத்தில் ஒரு கதையை புனைந்திருக்கிறார்.
கடப்பாரையாக முழுங்கியிருக்கிறார்.என்ன ஆகிறதென்று பார்ப்போம்.
வருகைக்கு நன்றி சம்பூகன்.
நல்ல ஆராய்ச்சி அக ஆராய்ச்சியாளரே...
டவுசர் பாண்டியின் அட்டகாசம் தாங்கதான் முடியலை... :((
வருகைக்கு நன்றி குரங்கண்ணே.
Post a Comment