மின்னலைப் பிடித்து
மின்னலைப் பிடித்து
மேகத்தில் துடைத்து
பெண்ணென்று படைத்து
வீதியில் விட்டு விட்டான்
இப்படியும் ஒரு
பெண்மையைப் படைக்க
தன்னிடம் கற்பனை
தீர்ந்ததை எண்ணித்தான்
பிரம்மனும் மூச்சை விட்டான்
அழகு என்பது ஆண்பாலா;பெண்பாலா
என்பதில் சந்தேகம் இன்றுடன் தீர்ந்தது
அழகு என்பது
நிச்சயம் பெண்பாலடா.
கவிதை என்பது மொழியின் வடிவம்
என்றொரு கருத்தும்
இன்று உடைந்தது
கவிதை என்பது கன்னி வடிவமடா.
(இதை எழுதிய கவிஞர் யாரென்று தெரியவில்லை.அவரை வியந்து போற்றுகின்றேன்)
Thursday, February 14, 2008
Subscribe to:
Post Comments (Atom)

10 comments:
Man falls in love with an angel
but he marries a woman.
புள்ளிராஜா,உங்கள் பின்னூட்டம் வெளியிட முடியாததற்கு மன்னிக்க வேண்டுகிறேன்.
பாட்டு கேட்டிருக்கிறேன்... ஆனால் வரிகள் இன்றுதான் தெரிந்தது... நன்று...
வருகைக்கு நன்றி ச்சின்னப்பையன் அவர்களே.
i agree with paambaati siththar.
அழகு என்பது நிச்சயம் பெண்பாலடா..
ரிப்பீட்ட்டேய்..
பாம்பாட்டிச்சித்தர் மற்றும் நவன் அவர்களுக்கும் நன்றி.
அழகு என்பது நிச்சயமாக ஆண்பால்தான். ஏனென்றால், சிங்கத்தில் அழகு எது ஆண் சிங்கமா, பெண் சிங்கமா?
மயிலில் அழகு எது ஆண் மயிலா? பெண் மயிலா?
கோழியில் அழகு எது சேவலா? பெட்டையா?
இவையெல்லாம் ஆண்தான் அழகு என்பதை நிறுபிக்கின்றது. ஆண்களுக்கு அழகு சாதனம் தேவையில்லை. ஆனால், அது பெண்களுக்கு தேவைப்படுகின்றது. இதிலிருந்து ஆண்தான் இயற்கையிலேயே அழகு என்பது புரிந்துக் கொள்ளலாம். நன்றி.
அப்துல் குத்தூஸ்,நீங்கள் சொல்வது அப்பட்டமான உண்மையாக இருக்கலாம்.ஆனால் இக்கவிதை ஒரு ஆண் பாடுவதாக உள்ளது.ஆண்,பெண்ணை ரசிக்கலாம்.ஆண்,ஆணையே ரசித்து பாட்டெழுத முடியுமா?ஆனால் அப்படி ஒரு காலம் வந்தாலும் வரலாம்.
வருகைக்கு நன்றி.
// அகஆராய்ச்சியாளன் said...
அப்துல் குத்தூஸ்,நீங்கள் சொல்வது அப்பட்டமான உண்மையாக இருக்கலாம்.ஆனால் இக்கவிதை ஒரு ஆண் பாடுவதாக உள்ளது.ஆண்,பெண்ணை ரசிக்கலாம்.ஆண்,ஆணையே ரசித்து பாட்டெழுத முடியுமா?ஆனால் அப்படி ஒரு காலம் வந்தாலும் வரலாம்.
வருகைக்கு நன்றி.
//
மன்னிக்கனும் அக ஆராய்ச்சியாளன். நான் தலைப்பை படித்ததும் எனக்கு ஏற்பட்ட கருத்தினைத்தான் கூறினேன். நான் அந்தப்பாட்டை படிக்கவே இல்லை. அதனால் என்னுடைய கருத்து தலைப்பிற்கு மட்டுமே.
ஒரு ஆண் மற்றொரு ஆணின் அழகை ரசிக்காமல் இருப்பதில்லை. ஏன் ஆணழகன் போட்டிக்கூட ஆண்கள் தானே காண்கின்றார்கள். அதற்காண மதிப்பும் இடுகின்றார்கள். நடிகர்களின் அழகை யாரும் ரசிப்பதில்லையா? அதற்காக ரசிகர் மன்றங்கள் ஆண்கள் தானே தொடங்குகின்றார்கள்?
பொதுவான கண்ணோட்டத்தில் ஆண் ஆண்களை ரசிப்பது நடந்துக் கொண்டுதான் உள்ளது. ஆனால், இச்சையின் காரணமாக இருக்கும் பட்சத்தில் அதற்கு என்னிடம் பதில் இல்லை. நன்றி.
அப்துல் குத்தூஸ்,விளக்கத்திற்கு நன்றி.
தலைப்பை கவர்ச்சியாக வைத்தால் தான் நான்கு பேர் வந்து படிக்கிறார்கள்.
Post a Comment