Wednesday, May 28, 2008

நாயும்,நண்பனும்

"அய்யா எந்த ஊரு ஜமீந்தாரு". நம்மள பார்த்து தான் இப்படி ஒரு கேள்வியக் கேட்டான் கருமம் பிடிச்ச ஒருத்தன். ஒன்னா ரூபாய்க்கு ரொட்டி வாங்கி ஒரு நாய்க்குப் போட்டுக்கிட்டு இருந்தேன்,அதுக்குத் தான் அப்படி ஒரு தாக்குதல் நம்ம மேல.இத்தனைக்கும் அவர் யாருன்னே எனக்குத் தெரியாது, நாய்க்கு ரொட்டி போட்டா இவன் ஏன்டா நாயா மாறுறான் அப்படின்னு யோசிச்சேன்.நம்மைக் கிண்டல் செய்வதின் மூலம் அவனுக்கு ஏதோ ஒரு மகிழ்ச்சி கிடைக்கிறது.நமக்குத் தான் லேசுல கோபம் வராதுல்ல,அதனால லூசுல விட்டுட்டேன்.

பல வருசத்துக்கு முந்துன கதை இது.சமீபத்துல நம்ம நண்பன் ஒருத்தன் இதே மாதிரி பேசி நல்லா வாங்கிக் கட்டிக்கிட்டான்.நண்பய்ங்க எல்லாரும் அரைபோதையில ரோட்டோரமா நின்னு பேசிக்கிட்டு இருந்தோம்.அப்ப ஒரு நாய் எங்களை சுத்திச்சுத்தி வந்துச்சு, இதப் பார்த்த ஒரு நாய்க்காதலன் டக்குன்னு ஓடிப்போயி ஒரு பிஸ்கட் பாக்கெட் வாங்கி போட ஆரம்பிச்சுட்டாரு.ஒருத்தன் செய்யுற எந்த ஒரு விசயத்தையுமே அல்லது பேச்சையுமே எதிர்த்து பேசுனா தான் நமக்கு மரியாதை அப்படின்னு நினைக்கக்கூடிய ஆள் ஒருத்தன் நம்ம கிட்ட இருக்கான்.உடனே ஆரம்பிச்சான் "டே மாப்ள நிப்பாட்டுடா , நீ செல்வாக்கா இருக்கேன்னு ஒத்துக்குறோம்" அப்படின்னு சொன்னான். எனக்கோ கோபம் பயங்கரமா வந்துருச்சு.உடனே நான் சொன்னேன், "ஏ இங்க பாருய்யா, உன் பாக்கெட்டுலயும் பணம் இருக்கு ,அந்த நாய்க்கு வாங்கி போடணுமுன்னு தோனுச்சா.ஆனா வருசத்துல எத்தனை கோயிலுக்கு போற.பழனி முருகன்,திருப்பதி,ஐயப்பன்,பிள்ளையார்பட்டி இதுபோக கொல தெய்வம்,அப்புறம் லோக்கல் சாமி எல்லாத்தையும் கும்புடரதுக்கு எப்படியும் பத்தாயிரம் ரூபாய் காலி பண்ணிருவ.ஆனா நாய்க்கு பிஸ்கட் போட்டா உங்களுக்கு கேலியா இருக்கு,டீக்கடையில் எவனாவது பிஸ்கட் வாங்கி போடுவான்னு தானே அதுக எல்லாம் நாயா காத்துக்கிடக்கு. எச்சிக்கையால கூட காக்கா வெரட்டாம கடவுளைக் கும்பிட்டா மட்டும் புண்ணியத்தை அள்ளிக் கொடுத்துருவாரா,கடவுள் என்ன அவ்வளவு முட்டாளா?" அப்புடின்னு ஒரேயடியா போட்டுத் தாக்கிட்டேன், பய பீதியாயிட்டான்.

இப்படி வில்லங்கமாவே பேசுற ஆட்களை வாழ்க்கை முழுக்க சந்திச்சுக்கிட்டே தான் இருக்குறோம், இவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக செய்யும் முயற்சி கடைசியில் நம்மை சமூகத்திடமிருந்து விலக்கி விடுகிறது .இந்த வில்லங்க ஆட்களை போடா சாட்டான் என்று ஃபூ என்று ஊதி விட்டுச் செல்லும் வல்லமை படைத்தவர் யாராவது இருந்தால் அந்த முறைகளை அறியத்தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

4 comments:

')) said...

நல்லா எழுதியிருக்கீங்க. அந்த மாதிரி ஆளுங்களை திருத்த முடியாது. தொடர்ந்து நல்ல விசயம்னு உங்க மனசுக்கு படறதை செய்யுங்க.

வாழ்த்துக்கள்.

')) said...

"அந்த மாதிரி ஆளுங்களை திருத்த முடியாது."
அதனால் விலகிப்போய் விடுவதே நல்லது , இல்லையா சிவா.

')) said...

/
அகஆராய்ச்சியாளன் said...

"அந்த மாதிரி ஆளுங்களை திருத்த முடியாது."
அதனால் விலகிப்போய் விடுவதே நல்லது , இல்லையா சிவா.
/

கண்டிப்பாக அவர்களிடமிருந்து விலகி இருப்பது மிக்க நல்லது.

')) said...

புரிந்துணர்வுக்கு நன்றி சிவா.