தமிழகத்தில் தேர்தல் முடிவுகளை நிர்ணயிப்பது கூட்டணி பலத்தைப் பொறுத்து தான் எப்போதுமே இருக்கிறது.அந்த வகையில் இப்போது ஜெ கூட்டணி வலுவாக இருக்கிறது.ஈழப்பிரச்சினையிலும் தடாலடி ஸ்டண்ட் அடித்து நடுநிலைவாதிகளை தன் பக்கம் திருப்புவதில் வெற்றி கண்டுள்ளார் ஜெ.
சென்ற சட்டமன்றத்தேர்தலில் ஜெ, திருமாவுடன் கூட்டு வைத்ததால் கணிசமான தேவரின ஓட்டுகளை இழந்தார்.திமுக தென்மாவட்டங்களில் பெருவாரியான வெற்றி பெற்றது. இம்முறை திருமா , திமுக கூட்டணியில்.
சட்டக்கல்லூரியில் தேவரின மாணவர்கள் பட்ட அடிக்கு பழிவாங்குவார்கள் என்று தான் எண்ணமுடிகிறது.
கூட்டணி பலம்,தமிழீழ ஆதரவு,திருமா எதிர்ப்பு ஓட்டுகள் என்று அதிமுக பலமாக இருக்கிறது.எனவே நிறைய இடங்களை கைப்பற்ற சாதகமான சூழ்நிலை உள்ளது.தமிழர்களிடம் விசித்திரமான குணம் ஒன்று இருக்கிறது, குத்தினால் ஒரேயடியாக குத்தி உச்சாணிக்கொம்பிலே கொண்டு போய் வைத்து விடுவார்கள்.அப்படியொரு மாஸ் ஹிஸ்டீரியாவினால் அதிமுகவுக்கு நாற்பதுக்கு நாற்பது கிடைத்தாலும் கிடைக்கலாம்.அப்படியொரு வாய்ப்பை உருவாக்கத்தான் பல்லைக்கடித்துக் கொண்டு பல பொய்யுரைகளை அவிழ்த்து விட்டுக்கொண்டுள்ளார் ஜெயலலிதா என்றே கருத முடிகிறது.
Wednesday, April 29, 2009
Tuesday, March 10, 2009
சாதனை மாணவர் ஆவது எப்படி?
2008ஆம் ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் இடம் வென்ற மாணவர் ராஜேஷ்குமார் அவர்களின் பேட்டி கலைஞர் தொலைக்காட்சியில் ரமேஷ்பிரபா அவர்களால் காணப்பட்டது.சாதனை மாணவரின் அனுபவங்களை பதிந்து வைக்க வேண்டும் என்ற எண்ணமே இந்தப்பதிவு.
மாணவர்கள் அதிகாலையில் எழுந்து படிக்கும் வழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.
படித்ததை எழுதிப்பார்த்துக் கொள்வது மிக முக்கியம்.இந்தப் பயிற்சி தேர்வறையில் பதற்றம் கொள்ளச்செய்யாது.
ஆசிரியர்களிடம் சந்தேகங்களைக் கேட்க தயக்கம் கொள்ளக்கூடாது.
கிராமப்புற மாணவர்களுக்கு மற்றும் பல மாணவர்களுக்கு ஆங்கிலம் சிம்ம சொப்பனமாக இருக்கும்.அவர்கள் ஆசிரியர்களிடம் தங்கள் பிரச்சினையை விளக்கி , அதை எப்படி மேற்கொள்வது என்பதை கேட்க வேண்டும்.பலப்பல ஆண்டுகளாக கற்பிப்பதிலேயே ஊறியிருக்கும் ஆசிரியர்கள் தங்கள் அனுவத்திலிருந்து நமக்கு நல்ல வழியைக்காட்டுவார்கள்.இரண்டாவதாக ஆங்கிலம் பேச தயக்கமோ,வெட்கமோ கொள்ளக்கூடாது.தவறுகளை கண்டறிந்து அடுத்த முறை திருத்திக்கொள்ள வேண்டும்.
பச்சைக்காய்கறிகள்,பழங்கள்,பழச்சாறு,நிறைய தண்ணீர் அருந்துவது போன்றவை , உடல் தளர்வடைவதை பெரிதும் குறைக்கிறது.
தேர்வு சமயங்களில் அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும்.
தியானம் செய்தல் மனதின் சக்தியைப் பெருக்கி ஞாபகத்திறனை அதிகரிக்கிறது.
தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டிருக்கும் நேரத்திற்கு அரைமணி முன்னதாகவே முடித்துவிட வேண்டும்.நமக்கே தெரியாமல் நாம் செய்திருக்கும் தவறுகளை கண்டுபிடித்து சரிசெய்ய வேண்டும்.
மதிப்பெண்கள் குறைவாயிருந்தால் , கடிந்து கொள்ளாமல் அவர்களை ஊக்கப்படுத்த பெற்றோர்கள் முன்வரவேண்டும்.இந்த அணுகுமுறை மாணவரின் மனவளர்ச்சிக்கு இன்றியமையாதது.
மேலும் பல பயனுள்ள தகவல்களை ராஜேஷ்குமார் வழங்கினார்.அவருக்கு வாழ்த்துகளும்,நன்றிகளும்.
பின்குறிப்பு:
என்னுடைய அனுபங்களை அவருடன் ஒப்பிட்டுப்பார்த்தேன்.
அதிகாலை எழும் பழக்கம் எப்போதுமே இருந்ததில்லை.
பாடங்களை எழுதிப்பார்க்கும் வழக்கமில்லாததால் , பத்தாம் வகுப்பு வரலாறு தேர்வில் வெறும் நாற்பது மதிப்பெண்கள் பெற்று மயிரிழையில் உயிர் தப்பினேன்.
தேர்வை விரைவாக முடித்துவிட்டு அதை சரிபார்க்க வேண்டும் என்ற அறிவு இல்லாததால் கணிதத்தில் தொண்ணூற்றியெட்டு மதிப்பெண்கள் எடுத்து இரண்டு மதிப்பெண்களை கோட்டை விட்டேன்.
கல்லூரியில் உனக்கு என்ன பிரச்சினை என்று கேட்ட ஆசிரியரிடம் ஆங்கிலம் தான் பிரச்சினை என்று கூறியவுடன் உற்றுப்பார்த்து விட்டு என்னை விட்டுவிட்டார்.நமக்கு உதவ இவருக்கு விருப்பமில்லையென இத்தனை நாள் வரையிலும் நான் நினைத்துக்கொண்டிருக்கிறேன்.எவ்வளவு பெரிய தவறைச் செய்துவிட்டிருக்கிறேன் என்பதை இன்று தான் உணர்ந்தேன்.இவனுக்கு உண்மையிலேயே ஆர்வம் இருந்தால் தன்னைதேடி வருவான் என்று அந்த ஆசிரியர் இருந்திருக்கக்கூடும்.

Monday, December 22, 2008
RP ராஜநாயஹம் அவர்களுக்கு எதிர்வினை.

இந்தப்பதிவு தான் என்னைத்தூண்டியது.http://rprajanayahem.blogspot.com/2008/12/joke-is-very-serious-thing.html
Sunday, November 9, 2008
சொந்தம்
கல்யாணம்னா சோத்துக்கு வருவான்
செத்தா சுண்டலுக்கு வருவான்.
இந்த தடாலடி தத்துவத்தில் உள்ள உண்மை என்னை பெரிதும் கவர்ந்துவிட்டது. காசு,பணமுன்னு வர்றப்ப கட்டுன பொண்டாட்டியே பத்ரகாளியா மாறுகிற சூழ்நிலையில சொந்தமாவது,சுருத்தாவது. நம்மால அஞ்சு பைசாவாவது பிரயோஜனம் இருந்தா தான் ஒருத்தன் நம்மளை மதிக்கிறான்.அப்படி பிரயோஜனம் இருக்கற வரைக்கும் தான் பொண்டாட்டி,புள்ளை கூட மதிக்கும். பிரயோஜனம் இல்லாத சூழ்நிலையிலும் மதிக்கக்கூடிய மனைவி,மக்களைப் பெற்றிருப்பவன் உலகின் மாபெரும் கோடீஸ்வரன். ஆனா நம்மை மாதிரி மிடில்கிளாஸ் ஆசாமிகள் அந்த பொண்டாட்டி,புள்ளைகளையாவது சந்தோசப்படுத்தி அவங்க கிட்ட இருந்து மதிப்பு,மரியாதைய வாங்குறதுக்கு தான் பலவித வித்தைகளையும் வாழ்க்கையில செய்யவேண்டியிருக்கு. குடும்பத்தை நல்லா வச்சுக்கிட்டு , அதைத்தாண்டி ஒரு நாலு பேருக்கு நல்லது செஞ்சா அந்த நாலு பேரு அவனைத் தங்கள் தலைவனாகவே ஏற்றுக்கொள்கிறார்கள். நாலு பேருக்கு தலைவருங்கறதால அஞ்சாவது ஆளும் மரியாதை கொடுக்க ஆரம்பிக்கிறான். எவனும் மதிச்சா என்ன மதிக்காட்டி என்ன?போங்கடா புல்டாக்குகளா அப்படின்னு நினைக்கிறவன் சித்தன் ரேஞ்சுக்கு போயிடுறான்.'என்னத்த வாழ்ந்து,என்னத்த சாதிச்சு' இப்படி பொலம்புற என்னத்த கண்னையாக்களும் இருக்காங்க.எல்லா பேருக்கும் பொழப்பு ஓடிக்கிட்டு தான் இருக்கு.

Friday, October 3, 2008
ஜீரோ டிகிரி
ஜீரோ டிகிரியை வாசித்தது ஒரு விபத்து தான். இலக்கின்றி நகருக்குள் சென்ற போது அரபுக்குதிரை ஒன்றின் அருமையான பின்பக்கங்களை ரசித்தவாறே பின் தொடர ஆரம்பித்து விட்டேன். கால்மணி நேர நடைக்குப்பின் குதிரை காணாமல் போன கணத்தில் நான் நின்று கொண்டிருந்தது பிரபல புத்தகக்கடையின் வாசலில். சிறிது நேரத்தை இங்கே போக்கலாம் என நினைத்து உள்ளே சென்றேன்.அரைமணி நேரம் அலசி முடிவாகத் தேர்ந்தெடுத்தது இரண்டு புத்தகங்கள்.ராகுல சாங்கிருத்தியாயனின் மனிதசமுதாயம்,சாருவின் ஜீரோ டிகிரியும். இரண்டில் ஒன்று தான் வாங்கவேண்டும். ராகுலா,சாருவா?.ராகுலை நம்பி வாங்கலாம்,சாருவின் மீது ஒரு மரியாதையும் இல்லை.ஆனாலும் இணையத்தை மேய்வதிலிருந்து அவரும் ஒரு இலக்கிய ஆளுமை என்று சந்தேகத்திற்கிடமின்றி தெரிகின்றது.பின்நவீனத்துவ பிச்சுவா பக்கிரிகளில் முதன்மையானவர் என்றும் உணர முடிகிறது,எனவே வாங்கிப்படிக்கலாம் என்று முடிவெடுத்து வாங்கிவிட்டேன்.உயிர்மை பதிப்பகத்தால் உயர்தரமாக அச்சிடப்பட்ட நூல்.புதுப்பொண்ணு போல் அச்சுக்குலையாமல் இருக்கும் புத்தகத்துக்கு வலிக்காமல் பக்கங்களைத் திருப்புகிறேன்,ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டிருந்தது ஜீரோ டிகிடி.முதல் பத்து பக்கங்களை தாண்டிவிட்ட போது காதிலே சூடாக உணர்ந்தேன்,தொட்டுப்பார்த்ததில் மூளை கலங்கி வழிந்து கொண்டிருந்தது தெரிந்தது.மூடிவிட்டு சிந்தித்தேன்.எப்படி இதை மேற்கொள்வது.இதைப்பற்றிய தகவல்கள் இணையத்தில் இல்லாமலா இருக்கும்.தேடியதில் கிடைத்தது கென்,சாருவின் இணையப்பக்கத்திலேயே ஒரு ஆங்கில விமர்சனம், மற்றும் ஒரு பெண். கென் மற்றும் சாருவின் பக்கம் சில தகவல்களை,விளக்கங்களை,நம்பிக்கையை அளித்தது.பெண் அவரை துவைத்து காயப்போட்டிருந்தார்,ராமலட்சுமியோ,சுப்புலட்சுமியோ..பெயர் தெரியவில்லை. Nonlinear வகையைச் சார்ந்தது இந்தக்கதை.இப்போது Non linear என்ற வார்த்தைக்கு அர்த்தம் கண்டுபிடிக்க முற்பட்டேன்.இதற்கு முன்னமே அந்த வார்த்தையை கேள்விப்பட்டிருந்தாலும் அதைப்பற்றி அறிந்துகொள்ளும் ஆர்வம் இருந்ததில்லை.ஏனென்றால் அது மிகவும் தத்துவார்த்தமான,சிக்கலான,ஆழமான அர்த்தங்களைக்கொண்டிருக்கும்,அந்த அளவுக்கு நமக்கு பொறுமை பத்தாது என்று எண்ணிக்கொண்டு சும்மா இருந்து விடுவேன்.ஆனால் புரிந்துகொள்ள எளிமையாகத்தான் இருந்தது.Line என்றால் கோடு அதாவது நேர்க்கோடு.Nonline என்றால் நேர்க்கோடற்றது என்று அர்த்தம். மருது,ஆதிமூலம் போன்றவர்களின் ஓவியங்கள் கன்னா பின்னாவென்று கிறுக்கலாக வரையப்பட்டிருக்கும்.அதனால் அவர்களுக்கு தத்ரூபமான ஓவியங்கள் வரையத்தெரியாது என்று அர்த்தமல்ல.அவர்கள் அதையும் தாண்டி சென்றவர்கள்.ஓவியக்கலையிலே புதிய முயற்சிகளை மேற்கொள்பவர்கள்.சாருவின் எழுத்தும் அத்தகையது தான்.எழுத்துக்களை கலைத்துப்போட்டுள்ளார்.கலைத்துப்போடும் உத்தியில் மட்டும் பின்நவீனத்துவம் இருந்தால் அது ஏமாற்றுவித்தையாகி விடும்.எழுத்தில் மேட்டர் இருக்கா,சரக்கு இருக்கா,பொருள் இருக்கா,அர்த்தம் இருக்கா என்றால் இருக்கிறது, நிச்சயம் இருக்கிறது,நிறையவே இருக்கிறது.அவருடைய இணையப்பக்கத்தில் இருப்பது போல் எளிய நடையில் இல்லாமல்,தீவிரமான நடையில்,அருமையான சொற்களைக்கொண்டு உருவாக்கியுள்ளார்.கதையிலே காதல் இருக்கிறது,காமம் இருக்கிறது,சோகம் இருக்கிறது,துரோகம் இருக்கிறது,வறுமை,நம்பிக்கை,நகைச்சுவை இருக்கிறது,அறிவியல் இருக்கிறது,ஆன்மீகம் இருக்கிறது.சில இடங்களில் வெடிச்சிரிப்பு சிரிக்க முடிகிறது,சில இடங்களில் கண்ணீர் துளிர்க்கிறது.ஜீரோ டிகிரி என்பதற்குப்பதிலாக 360டிகிரி என்று வைத்திருக்கலாம்.ஆம் , கதை வாழ்க்கையின் சகல பக்கங்களையும் தொட்டுச்செல்கிறது.
ஆபாசமாக இருக்கிறது,அருவறுப்பு உணர்வு மேலோங்குகிறது என்று நினைத்துக்கொள்பவர்களுக்கு கதையிலேயே பதில் இருக்கிறது.
"மைக்கேல் ஏஞ்சலோவின் ஓவியத்தைப்பார்த்த ஒருவன் சொன்னானாம்...ஏன்யா இவ்வளவு வரையத்தெரிந்த அந்த ஆளுக்கு கோமணமோ,ஜட்டியோ வரையத்தெரியாம போச்சு. புடுக்கெல்லாம் தெரியுதே."
எல்லையற்ற துணிச்சலும்,எல்லையற்ற எழுத்துவன்மையும் கொண்ட ஒருவனால் இப்படித்தான் கதை எழுத முடியும்.

Friday, August 15, 2008
காந்தி திரைப்படம்

சுதந்திரதினத்தை முன்னிட்டு உலகப்புகழ்பெற்ற காந்தி திரைப்படம் தூர்தர்ஷனில் தமிழில் ஒளிபரப்பப்பட்டது. ஆங்கிலத்தில் சிலமுறை பார்த்திருந்தாலும் தமிழில் பார்த்தது மிகவும் நன்றாக இருந்தது. நம் முன்னோர்களின் தியாகத்தையும்,சுதந்திரப்போராட்ட வரலாறையும் இதைவிட எளிமையாகவும்,அழகாகவும்,முக்கியமாக உண்மையாகவும் சொல்லிவிட முடியாது. காந்தி என்னும் மாமனிதனின் நாட்டைச்சேர்ந்தவன் என்று நாமெல்லாம் பெருமைப்பட்டுக்கொள்ளலாம்.
இறுதிக்காட்சிகளில் மிகமுக்கியமான ஒரு காட்சியை தூர்தர்ஷனில் இருட்டடிப்பு அல்லது கத்தரித்து விட்டார்கள். சுதந்திரம் வழங்க வெள்ளை அரசு முடிவு செய்தவுடன் காந்தி,ஜின்னா,படேல்,நேரு ஆகியோர் தனியறையில் ஆலோசனை செய்கின்றனர். தனிநாடு வேண்டுமென்று ஜின்னா உறுதியாக இருக்கிறார். காந்தி அவரை சமாதானம் செய்யும் விதமாக 'இந்தியாவின் முதல் பிரதமராக நீங்கள் இருங்கள்' என்கிறார், நீண்ட அமைதி நிலவுகிறது, நேருவின் குரல் அமைதியை உடைக்கிறது. "பாபு நீங்கள் சொன்னால் ஏற்றுக்கொள்கிறேன்,ஆனால் வெளியே நிற்கும் மக்கள் அதை ஏற்றுக்கொள்ளும் நிலை இல்லை" என்கிறார். அடுத்ததாக ஜின்னா "சுதந்திர இந்தியா, சுதந்திர பாகிஸ்தானா அல்லது உள்நாட்டு யுத்தமா" என்று கேட்கிறார். ஜின்னாவின் முத்தாய்ப்பான இந்த வசனத்திற்குப்பிறகு அடுத்த காட்சியில் இருநாடுகளாக பிரிந்து தனித்தனி தேசியக்கொடி ஏற்றிக்கொண்டிருப்பார்கள். இந்த இரு காட்சிகளுக்கும் இடையிலே உள்ள காட்சி வெட்டப்பட்டுள்ளது. அதில் காந்தி இறுதி முயற்சியாக மற்ற மூவரையும் அறைக்கு வெளியே அழைத்து வந்து பேசுவார். படேல் தனிநாடு பிரிவினையை மூர்க்கமாக எதிர்ப்பார், உடனே ஜின்னா "நாங்கள் வெள்ளையனிடம் சுதந்திரம் பெற்று, மீண்டும் உங்களிடம் அடிமையாக இருக்க மாட்டோம்" என்று கூறுவார். உங்களிடம் என்று சொல்லும் இடத்தில் இந்துக்களிடம் அல்லது பிராமணர்களிடம் என்று குறிப்பாக சொல்லுவாரா அல்லது உங்களிடம் என்று பொதுவாக சொல்லுவாரா என்பது சரியாக நினைவில் இல்லை. படத்தின் பஞ்ச் வசனம் இதுதான். ஏன் இது தூர்தர்ஷனால் நீக்கப்பட்டது?. சினிமாவில் இடம்பெற்ற இந்த உரையாடல் இயக்குனரின் கற்பனையா? அல்லது உண்மையாகவே நடந்தது தானா? தெரிந்தவர்கள் தெரியப்படுத்துங்களேன்.
Labels:
காட்ட மறந்த காட்சி
Thursday, August 7, 2008
என் இனிய இசின்பயேவா
மனிதனின் உன்னதத்தை,அவனுடைய முயற்சிகளின் வலிமையை, அடையக்கூடிய உயரங்களுக்கான எல்லையை உலகுக்கு உரத்துச்சொல்லும் அழகுப்புயல் தான் இசின்பயேவா. சாதாரண குடும்பத்தில் பிறந்த இவருக்கு தான் செய்த சாதனைகளை தானே முறியடித்துக்கொண்டு இருப்பதே வேலை. இருபத்து நான்கு முறை உலகசாதனை செய்துள்ளாராம். இத்தனை தடவைகளுக்கும் மேலாக உலகசாதனை ஆப்பிரிக்கக்கண்டத்து ஆண் சிங்கம் ஒன்று செய்துள்ளது,பெயர் தெரியவில்லை. போல்வால்ட் விளையாட்டில் ஐந்து மீட்டருக்கும் மேல் தாண்டிய உலகின் ஒரே பெண்மணி.கடந்த ஒலிம்பிக்கில் தங்கம் வாங்கிய இசின்பயேவா இம்முறையும் வாங்கவேண்டும்.
(ஒலிம்பிக்கில் செஸ்,கிரிக்கெட் போன்ற அறிவு சார்ந்த விளையாட்டுகளை சேர்க்காததற்கு ஒலிம்பிக் கமிட்டிக்கு கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.இந்த விளையாட்டுகளில் இந்தியா தான் தங்கம் வாங்கும் என்பதால் இவற்றை ஒலிம்பிக்கில் சேர்த்துக்கொள்ள உலகநாடுகள் சதி செய்கின்றன. இப்படி ஒரு கண்டுபிடிப்பை ஆ.வி அறிவுஜீவி மதன் செய்துள்ளார்)

ஒலிம்பிக்
Subscribe to:
Comments (Atom)